முத்தமிட முயன்ற வாலிபரை கடித்த நாகப்பாம்பு


முத்தமிட முயன்ற வாலிபரை கடித்த நாகப்பாம்பு
x

முத்தமிட முயன்ற வாலிபரை நாகப்பாம்பு கடித்தது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி நகரில் ஒரு வீட்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அந்த வீட்டில் ஒரு நாகப்பாம்பு புகுந்தது. இதைப்பார்த்த திருமண வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பாம்புபிடி வீரர் அலெக்ஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அலெக்ஸ், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்தார். பின்னர் அதற்கு முத்தம் கொடுக்க முயற்சித்தார்.

அப்போது அந்த பாம்பு, அலெசின் உதட்டில் கடித்தது. இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அலெக்சை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் அவர் பிடித்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story