பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி


பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கல்லூரி மாணவி செருப்பால் அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மங்களூரு:-

பாலியல் தொல்லை

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா டவுன் கோட்டேஸ்வர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி வழக்கம் போல விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதேப்பகுதியில் வசித்து வரும் நசீர் (வயது 35) என்பவர் கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் திடீரென்று மாணவியின் கையை பிடித்து சில்மிஷம் செய்ததுடன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

செருப்பால் அடித்தார்

பின்னர் அவர் கூச்சலிட்டு அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். மாணவியின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் நசீரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அப்போது அந்த கல்லூரி மாணவி தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து நசீரை சரமாரியாக அடித்தார்.

பின்னர் பொதுமக்கள், அவரை குந்தாப்புரா போலீசிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நசீரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோ வைரல்

இந்த நிலையில் கல்லூரி மாணவி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து செருப்பால் அடித்ததை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Next Story