தாஜ்மகாலின் வரலாற்றை கண்டறிய குழு அமைக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
உத்தரபிரதேசத்தின் அயோத்தி மாவட்ட பா.ஜனதா ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
புதுடெல்லி,
ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் பழைய சிவன் கோவில் எனவும், இது குறித்த உண்மையான வரலாற்றை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரபிரதேசத்தின் அயோத்தி மாவட்ட பா.ஜனதா ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.உபாத்யாய், சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையில் உடன்பாடு கொள்ள முடியாது எனக்கூறியது. எனவே இந்த மனுவை விசாரிக்க முடியாது எனக்கூறி கடந்த மே 12-ந்தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, ரஜ்னீஷ் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
Related Tags :
Next Story