கன்னட திரைப்படத்தில் நடிக்கும் பிரபல மல்யுத்த வீரர்


கன்னட திரைப்படத்தில் நடிக்கும் பிரபல மல்யுத்த வீரர்
x
தினத்தந்தி 6 March 2023 11:15 AM IST (Updated: 6 March 2023 11:19 AM IST)
t-max-icont-min-icon

கன்னட திரைப்படத்தில் பிரபல ரவுடி தி கிரேட் காளி நடிக்கிறார்.

பெங்களூரு:-

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் பூமி ஷெட்டி. அதேபோல் பிரபல நடிகையாக இருந்து வருபவர் மாலாஸ்ரீ. இவர்கள் இருவரும் 'கெண்டத செருகு' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் மல்யுத்த போட்டி மற்றும் அந்த வீரர்களை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல மல்யுத்த வீரரும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு நடைபெறும் உலக மல்யுத்த போட்டியில் பங்கேற்று சாம்பியன் ஆனவருமான இந்தியாவைச் சேர்ந்த 'தி கிரேட் காளி' நடிக்க உள்ளார். இந்த தகவலை படக்குழுவினரும் உறுதி செய்தனர். மேலும் அவர்கள் தி கிரேட் காளியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதுபற்றி படத்தின் இயக்குனர் ராகி ஷோம்லி கூறுகையில், 'தி கிரேட் காளியை நேரில் சந்தித்து இந்த திரைப்படத்தின் கதையையும், அவரது கதாப்பத்திரத்தையும் கூறினேன். கதையை கேட்ட அவர் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். இதன்மூலம் தி கிரேட் காளி

கன்னட திரைஉலகில் அறிமுகம் ஆகிறார்' என்று கூறினார்.


Next Story