பொதுஇடத்தில் குப்பை கொட்டியவருக்கு ரூ.1,000 அபராதம்


பொதுஇடத்தில் குப்பை கொட்டியவருக்கு ரூ.1,000 அபராதம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விராஜ்பேட்டை அருகே பொதுஇடத்தில் குப்பை கொட்டியவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குடகு;


குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து உடனே கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிராம பஞ்சாயத்து அதிகாரி சமீர், குப்பை கொட்டிய நபரை மடக்கி பிடித்து அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார். மேலும் அந்த குப்பையை அவரே எடுத்து செல்லும்படி உத்தரவிட்டார்.

இதுகுறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரி சமீர் கூறுகையில், மால்தாரே சுற்றுவட்டார பகுதிகளில் குப்பைகளை கொட்டினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுப்புற தூய்மைதான் மிகவும் முக்கியம். கிராமத்தை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால் பொதுமக்கள் கிடைக்கும் இடங்களில் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சித்தாபுரா, விராஜ்பேட்டை வனப்பகுதிகளையொட்டிதான் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story