பயணிகளிடம் இருந்து ரூ.6¼ லட்சம் அபராதம் வசூல்
பி.எம்.டி.சி பஸ்களில் ஓசி பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.6¼ லட்சம் லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம்(பி.எம்.டி.சி) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பி.எம்.டி.சி. சார்பில் இயக்கப்படும் பஸ்களில் கடந்த நவம்பர் மாதம் டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகள் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்களா? என்று சோதனை நடத்தினர். அப்போது 3 ஆயிரத்து 326 பயணிகள் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்தது தெரியவந்தது. அந்த பயணிகளிடம் இருந்து ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்து 30 அபராதமாக வசூலிக்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்த 1,486 கண்டக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதுபோல பெண் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஆண் பயணிகள் 240 பேரிடம் இருந்து ரூ.24 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பி.எம்.டி.சி. கூறியுள்ளது.
Related Tags :
Next Story