ரூ.5½ கோடியில் மிதக்கும் வீடு அமைக்கப்படுகிறது


ரூ.5½ கோடியில் மிதக்கும் வீடு அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 2 March 2023 12:15 AM IST (Updated: 2 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மல்பே செயின்ட் மேரிஸ் தீவில் ரூ.5½ கோடியில் மிதக்கும் வீடு அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மங்களூரு:-

உடுப்பி மாவட்டம் அருகே மல்பே பகுதியில் கடற்கரை அமைந்துள்ளது. சுற்றுலாத் தளமான இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரை அருகே செயின்ட் மேரிஸ் தீவு உள்ளது. இந்த தீவிற்கு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மல்பே கடற்கரையில் உள்ள செயின்ட் மேரிஸ் தீவில், மிதக்கும் வீடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேற்பார்வையின் கீழ், பொதுப்பணித்துறை சார்பில் செயின்ட் மேரிஸ் தீவு அருகே படகு வீடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. இந்த மேற்பார்வை குழுவினர் ஆய்வு செய்தபோது, விதிமுறையை மீறிதான் படகு வீடு கட்ட முடியும் என்று கூறப்பட்டது. இதனால் படகு வீடு கட்ட முடியாமல் போனது. இதையடுத்து மிதக்கும் வீடு கட்ட ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வு பணியில், மிதக்கும் வீடு கட்டுவதால், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. விதிமுறையையும் மீற வேண்டிய தேவையில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து உடுப்பி நகரசபை நிர்வாகம் மிதக்கும் வீடு கட்ட முன் வந்துள்ளது. சுமார் 113 மீட்டர் நீளம் மிதக்கும் வீடுகள் கட்டப்படுகிறது. இதற்காக நகரசபை நிர்வாகம் ரூ.5½ கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை கொண்டு மிதக்கும் வீடுகள் கட்டப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story