கழுத்தை அறுத்து ஓட்டல் ஊழியர் தற்கொலை முயற்சி
உப்பள்ளியில் கழுத்தை அறுத்து கொண்டு ஓட்டல் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உப்பள்ளி:-
பெலகாவியை சேர்ந்தவர் அனில்(வயது 35). இவர், தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கோகுல் ரோடு பகுதியில் உள்ள ஒட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஓட்டல் கழிவறைக்கு சென்ற அனில், கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சக ஊழியர்கள் சென்று பார்த்தனர். அப்போது கழிவறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு அனில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அனிலை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோகுல்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story