இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்த ஓட்டல் ஊழியர் கைது


இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்த ஓட்டல் ஊழியர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இளம் பெண் குளிப்பதை எட்டி பார்த்த ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் பவலூஸ் கேரியா (வயது 22). இவர் பெங்களூரு பெல்லந்தூரில் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த ஓட்டலில் உள்ள ஒரு அறையில் இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார். அந்த இளம்பெண் தனது அறையில் இருந்த குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தார்.

அப்போது பவலூஸ், இளம்பெண் குளித்து கொண்டு இருந்ததை எட்டி பார்த்ததாக தெரிகிறது. இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் பெல்லந்தூர் போலீசார் பவலூசை கைது செய்தனர். அவர் இளம்பெண் குளிப்பதை வீடியோ, புகைப்படம் எடுத்தாரா என்று கண்டறிய செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story