சிவமொக்கா சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு


சிவமொக்கா சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
x

சிவமொக்காவில் சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் திடீரென்று இறந்துள்ளார்.

சிவமொக்கா:-

சிவமொக்கா பழைய மண்டிலி பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 55). இவர் கடந்த 2012-ம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அப்துல் ரகுமான், சிவமொக்கா சோகானேயில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். மத்திய சிறையில் அவா் கைதிகளுக்கு சப்பாத்தி தயாரிக்கும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் அப்துல் ரகுமான் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிறை ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால் சிறை காவலர்கள் அவரை மீட்டு சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அப்துல் ரகுமான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துங்காநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story