இந்தியாவில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் ஒரே நாளில் 15,815 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 815 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 16,561 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று 15,815 ஆக குறைந்துள்ளது.
ஒரே நாளில் 20,018 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,93,112 ஆனது.நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,23,535 லிருந்து 1,19,264 ஆக குறைந்துள்ளது.
கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக பதிவானது. இந்தநிலையில், இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 996 பேர் இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,71,62,098 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 24,43,064 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.