வீட்டின் முன்பு நின்ற குழந்தையை கடத்த முயன்ற மர்மநபர்
மங்களூருவில் வீட்டின் முன்பு நின்ற குழந்தையை மர்ம நபர்கள் கடத்த முயன்றுள்ளார்.
மங்களூரு:-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சூரத்கல் அருகே சொக்கபெட்டு பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்று கடந்த 5-ந்தேதி இரவு 9 மணி அளவில் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்தப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், குழந்தையை கடத்த முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தை கத்தி கூச்சலிட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர், கடத்தல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து அந்த குழந்தை தனது பெற்றோரிடம் கூறி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சூரத்கல் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது, மர்மநபர் ஒருவர் வீட்டின் முன்பு நின்ற குழந்தையை கடத்த முயன்றது பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.