சிக்கமகளூருவில் ரூ.339 கோடி செலவில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படும்


சிக்கமகளூருவில் ரூ.339 கோடி செலவில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படும்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் ரூ.339 கோடி செலவில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

சிறந்த மாவட்டம்

சிக்கமகளூருவில் நேற்று 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரமேஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-

குடியரசு தினவிழா ஒவ்வொரு ஆண்டும் திருவிழாைவபோன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தேசபக்தி என்றும் இருக்கவேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். சிக்கமகளூரு மாவட்ட இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். காபி விளைச்சலில் சிக்கமகளூரு முதல் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதற்கும் இங்கிருந்துதான் காபி கொட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரூ.339 கோடி நிதி

அதேபோல ஒவ்வொரு ஆண்டும் சிக்கமகளூரு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த திருவிழா மாநில மக்களை திரும்பி பார்க்கும்படி செய்துள்ளது. மருத்துவத்துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. புதிய மருத்துவ மனைகள் கட்டு

வதற்கு ரூ.339 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. 150 மாணவர்கள் இங்கு படிக்க முடியும். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

சிக்கமகளூரு ஆம்பளே பகுதியில் ரூ.10 கோடி செலவில் ஹெலிபேடு அமைக்கப்படும். கபலி கிராமத்தில் டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story