பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்றவர் படுகொலை
மண்டியா டவுனில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்றவர் படுகொலை செய்யப்பட்டார்.
மண்டியா:
மண்டியா (மாவட்டம்) டவுன் மகாத்மா காந்தி பூங்கா முன்பு நேற்று ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென தாங்கள் கைகளில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த நபரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மண்டியா டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையானவர் யார்?, கொலையாளிகள் யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story