இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொல்ல திட்டம்- கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் பரபரப்பு தகவல்


இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொல்ல திட்டம்-  கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் பரபரப்பு தகவல்
x

ஹிஜாப், ஹலால் விவகாரங்களால் ஆத்திரமடைந்து இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொலை செய்ய பெங்களூருவில் கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

பெங்களூரு: ஹிஜாப், ஹலால் விவகாரங்களால் ஆத்திரமடைந்து இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொலை செய்ய பெங்களூருவில் கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

15 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் மாநிலம் முழுவதும் கடந்த மாதம் (செப்டம்பர்) பி.எப்.ஐ. அமைப்புகளின் அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது அந்த அமைப்பை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்திருந்தார்கள். அதாவது டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறையை போன்று மீண்டும் ஒரு சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டதால், கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 21-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அதுதொடர்பாக நடத்திய சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பெங்களூரு தடயவியல் ஆய்வு மையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்து பிரமுகர்களை கொல்ல திட்டம்

அதாவது கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் மற்றும் ஹலால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. ஹிஜாப்புக்கு எதிராக இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஹலால் இறைச்சியை வாங்க கூடாது என்றும் பிரசாரம் செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கைதானவர்கள், அவர்களது அலுவலகத்தில் இருந்து 55 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

அதில் கே.ஜி.ஹள்ளி, டி.கே.ஹள்ளியில் நடந்த வன்முறையை போன்று மீண்டும் ஒரு வன்முறையை நடத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் அல்சூர் கேட் அருகே உள்ள எம்பவர் இந்தியா அலுவலகத்தை சீல் வைக்கும் போது, அங்கு துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடைத்தது. அதில் 2047-ம் ஆண்டு இந்திய 100-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் போது, முஸ்லிம் நாடாக மாற வேண்டும், அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story