வானில் இன்று நிகழும் அரிய நிகழ்வு - ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி...!


வானில் இன்று நிகழும் அரிய நிகழ்வு - ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி...!
x
தினத்தந்தி 1 March 2023 9:21 AM IST (Updated: 1 March 2023 3:50 PM IST)
t-max-icont-min-icon

இன்று வானில் மிக அரிதான நிகழ்வாக, மிக அருகில் வெள்ளி, வியாழன் கோள்களை காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றும் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அப்படி சுற்றும் போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கமானது.

அந்த வகையில் கடந்த 21, 22 ஆம் தேதிகளில் வானில் வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வை காண முடிந்தது. அந்தவகையில் இன்று (புதன்கிழமை) வானில் வெப்பமான கோளான வெள்ளியும், ராட்சத கோளான வியாழனும் மிக அருகில் வருவதை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கோள்களும் வானத்தில் வெறும் 0.5 டிகிரி அளவு இடைவெளியில் இருக்கும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இரண்டு கோள்களுக்கு இடையே மில்லியன் கணக்கான கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இரு கோள்களும் சூரியனை சுற்றும் போது ஒரே நேர்கோட்டில் வருவதால் இரண்டும் அருகில் இருப்பதாக காண முடிகிறது.

இரண்டு கிரகங்களும் ஏற்கனவே இரவு வானத்தில் மிகவும் பிரகாசமாக உள்ளன, இரண்டும் சந்திக்கும் அரிய நிகழ்வை உலகம் முழுவதும் வானில் மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story