சிவமொக்காவில் ரூ.37 கோடியில் ஆய்வு மையம் அமைக்கப்படும்


சிவமொக்காவில் ரூ.37 கோடியில் ஆய்வு மையம் அமைக்கப்படும்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாக்கு நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்க சிவமொக்காவில் ரூ.37 கோடியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

சிக்கமகளூரு:-

பாக்கு விவசாயிகள் மாநாடு

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் நேற்று பாக்கு விவசாயிகள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டாட்டார். பின்னர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர் கூறியதாவது:-

சிக்கமகளூரு இயற்கை எழில் மிகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் வந்து பாக்கு விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பாக்கு விவசாயிகளை பார்க்கும்போது, சுப நிகழ்ச்சிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. பாக்கு இல்லாமல் நல்ல விஷயங்கள் இல்லை.

திருமணம் முதல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த பாக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த பாக்கு விளைச்சல் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு பாக்கு மரங்களை தாக்கும் மஞ்சள் இலை நோய்தான் காரணம் என்று கூறுகின்றனர். இந்த நோய்களை ஆய்வு செய்து, அதற்கான மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.37 கோடியில் ஆய்வு கூடம்

மேலும் இதற்காக சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் சிறப்பு ஆய்வு மையம் அமைக்கப்படும். மாநில அரசு சார்பில் ரூ.27 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.10 கோடியும் என் ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாக்கு நோய் ஆய்வு பணிக்காக 2 விஞ்ஞானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வில் வெளிநாட்டில் பணியாற்றி வரும் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள். இது தவிர பாக்கு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கியதுடன், விலையையும் உயர்த்தியுள்ளது. இதேபோல பசல் பீமா திட்டத்திற்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கிசான் சம்மான் திட்டத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு பாக்கிற்கு முக்கியத்துவம்

வெளிநாட்டு பாக்கு இறக்குமதிக்கு தடை விதித்துவிட்டு, மீண்டும் உள்நாட்டு பாக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் பல புதிய திட்டங்களை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. எனவே விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை. தொடர்ந்து தங்கள் பாக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

மத்திய, மாநில அரசு பாக்கு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் மத்திய மந்திரி சோபா, பா.ஜனதா மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் ேஜ.பி.நட்டா சிருங்கேரி சாரதம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு மடாதிபதி விதி சேகராவிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


Next Story