ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை
ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை போயுள்ளது.
உப்பள்ளி: கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கேசுவாப்பூர் அருகே குசுகல்லா ரோட்டில் வசித்து வருபவர் ஹவித். இவர் ரெயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், ஹவித்தின் வீட்டுக்கதவை லாவகமாக திறந்து உள்ளே நுழைந்தனர்.
பின்னர் பீரோவையும் லாவகமாக திறந்து அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுபற்றி ஹவித் அளித்த புகாரின்பேரில் கேசுவாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story