ராமர் கோவிலுக்குள் புகுந்து கோவிலை பூட்டிய காதல் ஜோடி... அதிரடியாய் வந்த போலீசார் - அடுத்து நடந்தது என்ன..?


x

ஆந்திராவில் பெற்றோருக்கு பயந்து ராமர் கோவிலுக்குள் புகுந்த காதல் ஜோடி, இரும்பு கேட்டை பூட்டிக்கொண்டு தாலி கட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணா,

ஆந்திராவில் பெற்றோருக்கு பயந்து ராமர் கோவிலுக்குள் புகுந்த காதல் ஜோடி, இரும்பு கேட்டை பூட்டிக்கொண்டு தாலி கட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புத்தாளபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக செயலகத்தில் நாகராஜு, காயத்ரி ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு வகுப்புகளை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் ஒரே இடத்தில் வேலை செய்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் திருமணம் செய்து கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய காதல் ஜோடி, புத்தாளபாளையத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த இரும்பு கேட்டை பூட்டிக்கொண்டு, மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

தகவலறிந்து சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, காவல்நிலையத்திற்கு காதல் ஜோடியை அழைத்துச் சென்றனர். பின்னர், இரண்டு பேரின் பெற்றோரை வரவழைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story