காரில் கடத்தி சென்று தையல்காரர் கொலை
சென்னராயப்பட்டணா அருகே காரில் கடத்தி சென்று தையல்காரரை கொலை செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஹாசன்:
தையல்காரர் கொலை
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா தண்டகனஹள்ளியை அடுத்த உப்பினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (வயது 40). தையல்காரரான இவர், கே.ஆர். சர்க்கிள் பகுதியில் கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, காரில் வந்த 4 பேர் கும்பல் கங்காதரை கடத்தி சென்றனர். பின்னர் காரின் உள்ளேயே வைத்து தாக்கிய கும்பல், சனிவாரசந்தை அருகே இறக்கிவிட்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சகோதரர் மோகன் என்பவர் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த அவர் நேற்று காலை இறந்தார்.
வலைவீச்சு
இதுகுறித்து சென்னராயணப்பட்டா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ஆனாலும் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.