சொரப் அருகே மாடு முட்டி காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
சொரப் அருகே மாடு முட்டி காயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஜடே கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா நடப்பது வழக்கம். இந்த விழா நேற்றுமுன்தினம் அந்த கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்கு ஜடே கிராமம் அருகே உள்ள சகட்டூரு பகுதியை சேர்ந்த ஆதி (வயது 20) என்ற வாலிபர் வந்திருந்தார்.
அப்போது அவர் மாடுகள் விரட்டும் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாடு ஒன்று ஆதியை கொம்பால் வயிற்றில் முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிர்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிகழ்ச்சியை அந்த பகுதியினர் முறையான அனுமதி பெறாமல் நடத்தியதாக தெரிகிறது.