அச்சுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
சமூக வலைத்தளத்தில் அச்சுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யபட்டுள்ளார்.
சிவமொக்கா;
சிவமொக்கா (மாவட்டம்) அகசவள்ளி பகுதியில் வசித்து வருபவர் இஸ்மாயில் (வயது 20). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளமான முகநூலில் (பேஸ்புக்) கணக்கு தொடங்கி உள்ளார்.
அதில் அவர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சாகசம் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தும் விதமான வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளாா். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ைவரல் ஆனது.
இந்த நிலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக வெளியிடப்பட்ட அந்த வீடியோவை பார்த்த சிவமொக்கா போலீசார் தாங்களாகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை அகசவள்ளி கிராமத்திற்கு சென்று கைது செய்தனர்.
அந்த வீடியோவை அவர் தமிழ்நாட்டிற்கு சென்றபோது எடுத்ததாக கூறினார். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story