நாகரஒலே வனப்பகுதியில், குட்டி யானையை வேட்டையாடி கொன்ற புலி
நாகரஒலே வனப்பகுதியில், குட்டி யானையை புலி வேட்டையாடி கொன்றது.
மைசூரு: மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகாவில் நாகரஒலே வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாகரஒலே வனப்பகுதியில் காக்கனகோட்டை பகுதியில் குட்டி யானை ஒன்றை புலி வேட்டையாடி அடித்து கொன்றது.
பின்னர் குட்டி யானையின் உடலை இழுத்து சென்றது. இது வனப்பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த வனத்துறையினர் நாகரஒலே வனப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் குட்டி யானை செத்த நிலையில் கிடந்தது. இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையின் உடலை அந்தப்பகுதியில் குழித்தோண்டி புதைத்தனர்.
Related Tags :
Next Story