தண்டவாளத்தில் படுத்து ரெயிலில் சிக்காமல் உயிர் தப்பிய பெண்
தண்டவாளத்தில் படுத்து ரெயிலில் சிக்காமல் உயிர் தப்பிய பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
ராஜனகுண்டே:-
பெங்களூரு புறநகர் ராஜனகுண்டே ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் நடந்து சென்றார். அவர் அங்கிருந்த தண்டவாளம் வழியாக நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் சரக்கு ரெயில் ஒன்று வேகமாக வந்தது. தண்டவாளத்தில் பெண் நடந்து சென்றதை பார்த்த ரெயில் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார்.
ஆனால் அந்த பெண் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை. உடனே சுதாரித்துக்கொண்ட பெண் தண்டவாளத்தில் கை, கால்களை நீட்டியபடி படுத்து கொண்டார். இதையடுத்து அந்த ரெயில் அவரை கடந்து சென்றது. தண்டவாளத்தில் படுத்துக்கொண்டதால் அவர் ரெயிலில் சிக்காமல் உயிர் தப்பிவிட்டார். இதை அந்த பகுதியில் நின்றவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story