குடும்பத்தகராறில் கொட்டகையில் பெண்ணை தங்கவைத்து சித்ரவதை- உன்சூர் அருகே சம்பவம்
உன்சூர் அருகே கொட்டகையில் பெண்ணை தங்கவைத்து சித்ரவதை செய்த சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு:
குடும்பத்தகராறு
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவில் மறுஉரு கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக் (28). இவரது மனைவி அஸ்வினி(24). இதில் அஸ்வினி சித்ரதுர்காவை சேர்ந்தவர். இவர்கள் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதுகுறித்து அஸ்வினி, ஜெயப்புரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த சில நாட்களாக எனக்கும், கணவர் அபிஷேக்குக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வருகிறது.
போலீசார் விசாரணை
இதில் நான் வேறு சாதி என்பதால் அதைசொல்லி அபிஷேக் ஒதுக்கி வைக்கிறார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக உள்ளனர். மேலும் அவர்கள் என்னை வீட்டுக்குள் சேர்க்காமல் மாட்டு கொட்டகையில் தங்க வைக்கிறார்கள். எனவே, நடவடிக்கை எடுத்து தனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.