துணிக்கடையில் வாடிக்கையாளர் போல் வந்து ஆடைகளை திருடிய பெண்; கண்காணிப்பு கேமராவில் பதிவு


துணிக்கடையில் வாடிக்கையாளர் போல் வந்து ஆடைகளை திருடிய பெண்;  கண்காணிப்பு கேமராவில் பதிவு
x
தினத்தந்தி 3 Oct 2022 12:30 AM IST (Updated: 3 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரேயில் துணிக்கடையில் வாடிக்கையாளர் போல் வந்து ஆடைகளை திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;


தாவணகெரே டவுன் பகுதியில் துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த துணிக்கடைக்கு நேற்று ஒரு பெண் வாடிக்கையாளர்கள் போல வந்துள்ளார். அங்கு வந்த பெண் ரூ.2,600-க்கு துணிகள் வாங்கி உள்ளார். இதற்கான பணத்தை போன்-பே மூலம் அனுப்புவதாக கூறியுள்ளார். அப்போது அவர் நெட்வொர்க் கிடைக்கவில்லை என கடையின் உாிமையாளரிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறிது நேரம் அந்த பெண் கடையின் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்து கொண்டு அவரிடம் கவனத்தை திசை திருப்பியுள்ளார். பின்னர் தான் வாங்கிய துணிகளுக்கு பணம் கொடுக்காமல் கடையில் இருந்து சென்று விட்டார். இதையடுத்து கடையின் உரிமையாளர் அந்த பெண் துணிகளுக்கு பணம் கொடுக்காமல் சென்றதை உணர்ந்தார்.

உடனே இவர் பெண்ணை அந்த பகுதியில் தேடிபார்த்துள்ளார். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் தாவணகெரே படாவனே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்துள்னர்.

இதில் அந்த பெண் கடையில் இருந்து ெசன்ற காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story