கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது


கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாலேஹொன்னூர் அருகே கல்லூரி மாணவியை திருமண செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;


கல்லூரி மாணவி

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஹொன்னூர் அருகே உள்ள காண்டியா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 22). கூலி தொழிலாளி. அதே பகுதியில் 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பி.யு.சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுநாத்துக்கும், மைனர் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்துள்ளனர். இதில் மஞ்சுநாத், மைணர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

3 மாதம் கர்ப்பம்

மேலும் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவா் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்துள்ளார். அதில் அவர் 3 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறவில்லை என தெரிகிறது. இதையடுத்து மாணவி, மஞ்சுநாத்திடம் சென்று இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டுள்ளார்.

மேலும் தான் கர்ப்பாமாக இருக்கும் விஷயத்தையும் கூறியுள்ளாா். ஆனால் மஞ்சுநாத் திருமணத்துக்கு மறுத்ததாக தெரிகிறது. ஆனால் மாணவி, மஞ்சுநாத்தை விடாமல் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். ஆனாலும் கூட அவர் ஒத்துகொள்ள வில்லை.

போக்சோவில் கைது

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கதறி அழுதபடி கூறியுள்ளார். இதைகேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து பாலேஹென்னூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மைனர்பெண் தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளாா்.


Next Story