திறந்த ஜீப்பில் நின்றபடி இளம்பெண் அதிவேக பயணம்; வைரலான வீடியோ
மராட்டியத்தில் திறந்த ஜீப்பில் நின்றபடி அதிவேக பயணம் செய்த இளம்பெண்ணுக்கு போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.
புனே,
இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி விண்ணை தொட்டுள்ளது. இதேபோன்று தானியங்கி துறையிலும் பல்வேறு மாற்றங்களை நாம் கண்டு வருகிறோம்.
அவற்றில் ஒன்றாக ஆடம்பர ரக கார்களில் ஒரு சில ஆண்டுகளாக திறந்த நிலையிலான வாகன உற்பத்தி அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் இடையேயும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், பயணத்தின்போது புத்தம் புது காற்று வாகனத்திற்குள் வந்து செல்லும். கார் மற்றும் ஜீப்பின் தோற்றமும் கூடும்.
எனினும், ஒரு சிலர் இதனை தவறாக பயன்படுத்துவதும் காணப்படுகிறது. மராட்டியத்தில் மும்பை கடலை ஒட்டிய சாலையில் திறந்த ஜீப் ஒன்றில் நின்றபடி இளம்பெண் ஒருவர் அதிவேகத்தில் பயணித்து உள்ளார்.
அவரது இதுபோன்ற செயல்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது. எதிரே வருபவருக்கு அல்லது அவருக்கே கூட பாதக நிலை ஏற்பட கூடும். தவிர, சாலை பாதுகாப்பு விதிகளை மீறும் செயலாகவும் பார்க்கப்படுகிறது.
இதுபற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனை பல்வேறு மாநில காவல் துறையும் கலந்து பேசியுள்ளனர்.
இதன்படி, இனி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், எந்த பிரிவில் இளம்பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெளிவாக தெரியவில்லை.