ஆதார்-பான் இணைப்பு: கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிக்க வேண்டும் பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்


ஆதார்-பான் இணைப்பு: கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிக்க வேண்டும் பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்
x
தினத்தந்தி 22 March 2023 1:15 AM IST (Updated: 22 March 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

‘நாட்டில் பெரும்பாலான மக்கள், இணைய வசதி அரிதாக உள்ள நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

புதுடெல்லி,

மக்கள் தங்கள் ஆதார்-பான் எண்களை இம்மாதம் 31-ந்தேதிக்குள் ரூ.1,000 செலுத்தி இணைக்க வேண்டும், இல்லாவிட்டால் பான் எண் செயலிழந்துவிடும் என மத்திய வருவாய்த் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், 'நாட்டில் பெரும்பாலான மக்கள், இணைய வசதி அரிதாக உள்ள நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், இணையம் வாயிலாக ஆதார்-பான் எண்களை இணைக்கவேண்டும் என்ற உத்தரவைப் பயன்படுத்தி சிலர் அப்பாவி மக்களிடம் கட்டணமாக பணம் பறித்து வருகின்றனர். எனவே, மக்களின் ஆதார்-பான் எண்களை தபால் நிலையங்கள் மூலம் கட்டணமின்றி இணைத்துக்கொடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் நிதியமைச்சகம், வருவாய்த் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும், ஆதார்-பான் இணைப்புக்கான கால அவகாசத்தையும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.


Next Story