பிரதமர் மோடியின் தாயாரை கேலி செய்து பேசிய ஆம் ஆத்மி தலைவர் ? - வீடியோ பகிர்ந்து பாஜக கண்டனம்


பிரதமர் மோடியின் தாயாரை கேலி செய்து பேசிய ஆம் ஆத்மி தலைவர் ? - வீடியோ பகிர்ந்து பாஜக கண்டனம்
x

கோபால் இத்தாலியா பிரதமர் மோடியின் தாயார் குறித்து கேலி செய்து பேசும் வீடியோவை குஜராத் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், அவர் பிரதமர் நரேந்திர மோடி மீது தரக்குறைவான கருத்துக்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோபால் இத்தாலியாவுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து, அங்கு நேரில் ஆஜராகி இன்று விளக்கமளித்தார் இத்தாலியா.;மேலும் இன்று அவர் சில மணி நேரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கோபால் இத்தாலியா பிரதமர் மோடியின் தாயார் குறித்து பேசும் வீடியோவை குஜராத் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் கோபால் இத்தாலியா ,பிரதமர் மோடியின் தாயாரை கேலி செய்து பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு பாஜக தலைவர்கள் சார்பில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவரும், மத்திய மந்திரியுமான ஸ்மிருதி இரானி கோபால் இத்தாலியா பேசிய வீடியோவை பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் இத்தாலியா இப்போது உங்கள் ஆசியுடன் ஹீரா பாவை தவறாக பேசுகிறார். நான் எந்த கோபத்தையும் தெரிவிக்கவில்லை, குஜராத் மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதை நான் காட்ட விரும்பவில்லை, ஆனால் குஜராத்தில் உங்கள் கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்படும். இனி மக்கள் நீதி வழங்குவார்கள்.என தெரிவித்துள்ளார்.

மேலும் கோபால் இத்தாலியாவுக்கு பாஜக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Next Story