கேமராக்களை அபேஸ் செய்த மாணவர் பிடிபட்டார்


கேமராக்களை அபேஸ் செய்த   மாணவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேமராக்களை அபேஸ் செய்த மாணவர் பிடிபட்டார்

பெங்களூரு: யஷ்வந்தபுரத்தில் வசிக்கும் நபர், ஆன்லைன் மூலமாக கேமராக்கள் ஆர்டர் செய்திருந்தார்.அந்த கேமராக்களை கொடுக்க கூரியர் நிறுவன ஊழியர் யஷ்வந்தபுரத்தில் முகவரியை தேடி திரிந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நபர், தான் கேமராக்கள் ஆர்டர் செய்ததாக கூறியும், ஊழியரின் கவனத்தை திசை திருப்பியும் கேமராக்களை வாங்கி சென்று விட்டார். ஆனால் அவர் கேமராக்களை ஆர்டர் செய்யாமல் ஊழியரை ஏமாற்றியது தெரிந்தது. இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வநதனர். இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்டர் செய்தது போல் நடித்து கேமராக்களை அபேஸ் செய்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.3.70 லட்சம் மதிப்பிலான 2 கேமராக்கள், 2 லென்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story