பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் தங்க நகைகள் அபேஸ்
சிவமொக்காவில் பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் தங்க நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசர்ா வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிவமொக்கா:-
பாலீஷ் போடுவதாக...
சிவமொக்கா டவுன் மல்லிகார்ஜூனா பகுதியை சேர்ந்தவர் 53 வயது பெண். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு 2 பேர் வந்துள்ளனர்.
அவர்கள் தங்க நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். மேலும்
முதலில் மோதிரத்தை கொடுத்தால் இலவசமாக பாலீஷ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். இதனால் அந்த பெண் தான் அணிந்திருந்த மோதிரத்தை அவர்களிடம் கொடுத்தார். அதனை பாலீஷ் செய்து பெண்ணிடம் மர்மநபர்கள் 2 பேரும் கொடுத்துள்ளனர். அப்போது மோதிரம் புதியது போல மின்னியதால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண், வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து மர்மநபர்கள் குக்கரை எடுத்து வரும்படி கூறி உள்ளனர்.
ரூ.2 லட்சம் நகைகள்
பின்னர், அதில் பொடியை தூவிய அவர்கள், அந்த குக்கரில் பொடியை தூவி உள்ளோம், நன்கு கொதிக்க விட்டு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் நகை மின்னும் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து அந்த பெண், குக்கரில் நகைகளை தேடி உள்ளார். ஆனால் தங்க நகைகள்
மயமாகி இருந்தது. இதனால் மர்மநபர்கள் பாலீஷ் போடுவதாக கூறி தங்க நகைகளை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் துங்காநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.