கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தமிழகத்தை சேர்ந்தவர் கைது
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தமிழகத்தை சேர்ந்தவரை பண்ட்வால் போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பிசி ேராடு அருகே கடந்த 2017-ம் ஆண்டு சாலையில் நடந்து சென்ற பாதசாரி மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து பண்ட்வால் போலீசார் லாரி டிரைவரான தமிழகம் பெரம்பலூா் மாவட்டம் வேப்பன் தாலுகா பெரியவடகரை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அவர் அன்று முதல் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் ேகார்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் தலைமறைவாக இருந்த செல்வராஜை பண்ட்வால் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை நீதிமன்ற காவிலில் வைக்க உத்தரவிட்டார்.