காட்டுயானை அட்டகாசத்திற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை


காட்டுயானை அட்டகாசத்திற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை
x

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்து காட்டுயானை அட்டகாசத்திற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி கோபாலய்யா தெரிவித்தார்.

ஹாசன்:

காட்டுயானை அட்டகாசம்

மலைநாடு மாவட்டமான ஹாசனில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. காட்டுயானைகள் கிராமங்களுக்குள் புகுந்து வீடு, பொருட்களை சூறையாடுவதும், தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் அந்த கிராம மக்கள், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் காட்டுயானைகள் பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் அவர்கள், காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி அரசும், காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனாலும் காட்டுயானை அட்டகாசம் குறையவில்லை.

இந்த நிலையில் ஹாசனில் கன்னட ராஜ்யோத்சவா விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா கலந்துகொண்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிரந்தர தீர்வு

ஹாசன், ஆலூர், பேளூர் ஆகிய பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஹாசன் மாவட்டத்தில் காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனாலும் பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி காட்டு யானைகள் அட்டகாசத்திற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story