தலித் சமுதாய மக்கள் மீதான வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை கோலார் கலெக்டர் வெங்கடராஜா பேச்சு


தலித் சமுதாய மக்கள் மீதான வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை  கோலார் கலெக்டர் வெங்கடராஜா பேச்சு
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தலித் சமுதாய மக்கள் மீதான வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோலார் கலெக்டர் வெங்கடராஜா தெரிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹொல்லேரஹள்ளி கிராமத்தில் சாமி சிலையை தொட்டதற்காக தலித் சமுதாயத்தை சேர்ந்த சிறுவனான சேத்தனின் குடும்பத்திற்கு அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ரூ.60 அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அபராதம் செலுத்த தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் வெங்கடராஜா பேசியதாவது:-

கோலார் மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன் கொடுமையை அனுமதிக்க முடியாது. எனவே, தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமை நிகழாமல் போலீசார் தடுத்து நிறுத்துவதுடன் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சமம். அப்படியிருக்க சமூகத்தில் உயர்ந்தவர்கள்-தாழ்ந்தவர்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story