புதன்கிழமை முதல் வழக்கமான வழிகளில் ரெயில்களை இயக்க நடவடிக்கை: ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்னவ்
ரெயில் விபத்து குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்னவ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
சென்னை,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீட்பு பணிகள் குறித்தும், ரெயில்சேவை குறித்தும் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்னவ் பேட்டியில் கூறும்போது,
விபத்து குறித்து மாநில அரசு உடனுக்குடன் சரியான தகவல்களை அளித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம். ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரெயிலில் பயணித்த பலரும் பத்திரமாக அவரவர் சொந்த வீடுகளை சென்றடைந்துவிட்டனர். புதன் கிழமை காலை முதல் வழக்கமான வழிகளில் ரெயில்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story