இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது


இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது
x
தினத்தந்தி 5 Jun 2022 9:57 AM IST (Updated: 5 Jun 2022 10:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒட்டுமொத்த நாட்டில் இந்த தொற்று 4,041 பேருக்கு பாதித்தது. நேற்று மீண்டும் 4 ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் சரியாக 3,962 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் எகிறியுள்ளது. கடந்த 24 மணி நேர பாதிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,270- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 052 ஆக உள்ளது.


Next Story