இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 015 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 781 ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 489 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,574 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 219.86 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதர அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story