இந்தியாவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,098 ஆக பதிவு


இந்தியாவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,098 ஆக பதிவு
x

இந்தியாவில் ஒரே நாளில் 1,321 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,321 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,10,590 ஆனது.

என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,098 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,461 பேர் ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,10,590 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,19,67,80,694 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 1,64,567 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story