பிடிவாரண்டு எதிரொலி நடிகை ஜெயபிரதா கோர்ட்டில் ஆஜர் உடனடியாக ஜாமீனில் விடுதலை


பிடிவாரண்டு எதிரொலி  நடிகை ஜெயபிரதா கோர்ட்டில் ஆஜர் உடனடியாக ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 5 Jan 2023 4:15 AM IST (Updated: 5 Jan 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ஜெயபிரதா, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியின் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தார்.

பரேலி,

நடிகை ஜெயபிரதா, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியின் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, பா.ஜனதாவில் சேர்ந்தார். அதே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அந்த தேர்தலின்போது, உள்ளூர் அதிகாரிகளின் முன்அனுமதியின்றி பிரசார கூட்டம் நடத்தியதால், அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

பரேலியில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஜெயபிரதா கோர்ட்டில் ஆஜராகததால், அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்தநிலையில், ஜெயபிரதா நேற்று அக்கோர்ட்டில் ஆஜரானார். அவர் தனது ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அதை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


Next Story