தந்தைக்கு கள்ளத்தொடர்பு; வாலிபர் தற்கொலை
பெங்களூருவில் தந்தைக்கு கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்து வாலிபர் தற்கொலை தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
பெங்களூரு ஜே.ஜே.நகர் அருகே ரங்கநாத காலனியை சேர்ந்தவர் சந்துரு என்ற சந்து (வயது 19). இவரது தந்தைக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சந்துருவுக்கு தெரியவந்ததும், அவர் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறி தனது தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மதுஅருந்தி விட்டு வீட்டுக்கு வந்த சந்துரு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தைக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்த காரணத்தால் மனம் உடைந்த சந்துரு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Related Tags :
Next Story