கடன் பெற்று தருவதாக கூறி முன்பணம் வசூல்: ரூ.1 கோடி மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது
கடன் பெற்று தருவதாக கூறி முன்பணம் வசூல் செய்து ரூ.1 கோடி மோசடி வழக்கில் தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் விஸ்வநாத் ஷெட்டி. தொழில் அதிபரான இவர் ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.300 கோடி கடன் பெற்றுத்தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். அதற்காக விஸ்வநாத் ஷெட்டியும், அவரது நண்பரான மும்பையைச் சேர்ந்த சதாம் என்பவரும் சேர்ந்து அந்த கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.1.15 கோடியை முன்பணமாக பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் உத்தரவாதம் அளித்தபடி அந்த கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.300 கோடி கடன் பெற்று தரவில்லை.
இதுபற்றி கட்டுமான நிறுவனம் சார்பில் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாத் ஷெட்டியை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சதாமை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story