முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக 'சே-சி.எம்.' இயக்கம் காங்கிரஸ் கட்சி தொடங்கியது


முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக   சே-சி.எம். இயக்கம் காங்கிரஸ் கட்சி தொடங்கியது
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக ‘சே-சி.எம்.' இயக்கம் காங்கிரஸ் கட்சி தொடங்கியது

பெங்களூரு: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி 'சே-சி.எம்.' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது.

இதுவரை பதிலளிக்கவில்லை

கர்நாடக அரசு மீது 40 சதவீத கமிஷன் உள்பட பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இதை மனதில் வைத்து காங்கிரஸ் 'பே-சி.எம்.' என்ற இயக்கத்தை தொடங்கியது. பெங்களூருவில் சுவர்களில் அதுகுறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக 'சே-சி.எம்.' என்ற இயக்கத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் சார்பில் பா.ஜனதா மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் 50 கேள்விகளை கேட்டோம். அவற்றுக்கு அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை. அவர்கள் அமைதியாக இருப்பதன் மூலம் அவர்கள் தங்களின் தவறுகளை ஏற்றுக்கொண்டதாக புரிந்து கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

பிரியங்க் கார்கே

அக்கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. கூறும்போது, "கர்நாடகத்தில் நடைபெறும் ஊழல்களை முன்வைத்து நாங்கள் 'பே-சி.எம்.' இயக்கத்தை நடத்தினோம். அப்போது தான் அவர்கள் நாங்கள் எழுப்பிய கேள்விகள் குறித்து பேசினர். இப்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று கேட்டோம்.

பா.ஜனதாவோ அல்லது முதல்-மந்திரியோ இதுவரை பதிலளிக்கவில்லை. அதனால் நாங்கள் 'சே-சி.எம்' இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம். இதன் மூலம் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து பேச வைப்போம்" என்றார்.


Next Story