உலகின் மகத்தான 50 இடங்கள் பட்டியலில் 'ஆமதாபாத்' - அமித்ஷா பெருமிதம்


உலகின் மகத்தான 50 இடங்கள் பட்டியலில் ஆமதாபாத் - அமித்ஷா பெருமிதம்
x

உலகின் மகத்தான 50 இடங்கள் பட்டியலில் ஆமதாபாத் சேர்க்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான ஆமதாபாத், டைம் பத்திரிகையால் "2022-ம் ஆண்டின் உலகின் 50 மகத்தான இடங்கள்" பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதம் அடைந்து 'டுவிட்டரில்' கருத்து பதிவிட்டு உள்ளார்.

அதில், "இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான ஆமதாபாத், உலகின் 50 மகத்தான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக குஜராத் மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயம் ஆகும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும், "2001-க்கு பிறகு, மோடியின் தொலைநோக்கு சிந்தனையால், குஜராத்தில் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆமதாபாத்தில் சபர்மதி நதி முகத்துவாரமாகட்டும், அல்லது அறிவியல் நகராகட்டும் எதுவாயினும் மோடி எப்போதும் அடுத்த தலைமுறை கட்டமைப்பை உருவாக்குவதையும், இந்தியாவை எதிர்காலத்துக்கு தயார் செய்வதையுமே வலியுறுத்தினார்" என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story