காற்று மாசு விவகாரம்: 4 மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


காற்று மாசு விவகாரம்: 4 மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
x

இதை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

புதுடெல்லி,

மனித உயிருக்கு டெல்லியில் நிலவும் காற்று மாசு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மனிதனின் ஆயுட்காலம் குறைவதாகவும் வெளியான பத்திரிகை செய்தி அடிப்படையில், இதை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஆணையத்தின் உத்தரவின்பேரில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், காற்று மாசு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருகிற 10-ந் தேதி நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராகுமாறு கூறியுள்ளது.


Next Story