டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரிப்பு - காற்றின் தரம் மிகவும் மோசம்..!


டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரிப்பு - காற்றின் தரம் மிகவும் மோசம்..!
x

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 355 என்ற அளவில் பதிவாகி 'மிகவும் மோசம்' என்ற நிலையை எட்டியது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 355 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' என்ற நிலையை எட்டியது.

டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 355, மதுரா சாலை பகுதியில் 340, நொய்டாவில் 392 என்ற நிலையில் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.இதனையடுத்து, காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


Next Story