தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ரூ.94 கோடி ஒதுக்கீடு; மத்திய மந்திரி ஷோபா பேட்டி
சிருங்கோியில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ரூ.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ேஷாபா தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
ரூ.94 கோடி
மத்திய மந்திாி ஷோபா, டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிக்கமகளூரு மாவட்டத்தில் சாலை வளர்ச்சி பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா நெம்மூரில் இருந்து தனிக்கோடு சோதனைச்சாவடி வரை 8.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ரூ.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மலைப்பகுதி சாலை என்பதால் அதனை அகலப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்று மத்திய மந்திரி நிதின் கட்காரி, அந்த சாலையை அகலப்படுத்த சம்மதித்து நிதி ஒதுக்கி உள்ளார்.
பாரபட்சமின்றி...
பிரதமர் மோடி, நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்து வருகிறார். இதன்மூலம் நாடு மென்மேலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மக்கள் அறிவர்.
எனது தொகுதியில் சாலை வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.