முனிசாமி எம்.பியுடன், ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. வாக்குவாதம்


முனிசாமி எம்.பியுடன், ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. வாக்குவாதம்
x

ராபர்ட்சன்பேட்டையில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற முனிசாமி எம்.பி உத்தரவு. ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோலார் தங்கவயல்:-

ஆக்ரமிப்புகளை அகற்றிய எம்.பி. முனிசாமி

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை சல்டானா சர்க்கிளில் இருந்து ஆண்டர்சன்பேட்டை மார்க்கமாக கெம்பாபுரா வரை 4 வழி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் இடையில் சல்டானா சர்க்கிள் அருகே உள்ள பெத்தேல் தேவசபை தேவாலயத்தில் எதிரே முன்னாள் நகரசபை தலைவர் தாஸ் சின்னசவரியின் சகோதரர் ஸ்டீபன் என்பவர் 4 மாடிகள் கொண்ட திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்த கட்டிடம் நடைபாதையை ஆக்ரமித்து கட்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எம்.பி,எம்.எல்.ஏ.வு வாக்கு வாதம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இடத்திற்கு கோலார் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த முனிசாமி எம்.பி. நேரில் வந்து திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த கட்டிடம் நடைபாதையை ஆக்ரமித்து கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகளை அழைத்த முனிசாமி எம்.பி அந்த கட்டிடங்களை அகற்றும் படி உத்தரவிட்டார்.மேலும் இதற்காக ஒரு வாரம் கால அவகாசம் வழங்கினார்.இந்நிலையில் இதற்கு நகரசபை

தலைவர் வள்ளல் முனிசாமி மற்றும் கோலார் தங்கவயல் காங்கிரஸ் கட்சி தலைவர் மதலை முத்து ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முனிசாமி எம்.பி தனது முடிவில் இருந்து பின் வாங்கவில்லை.

வாக்குவாதம்

இதையடுத்து இந்த தகவல் தொகுதி எம்.எல்.ஏ.வான ரூபாகலா சசிதருக்கு கிடைத்தது. அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றகூடாது என்று முனிசாமி எம்.பியிடம் முறையிட்டார். ஆனால் அவர் அரசு தரப்பில் சாலை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருப்பது தவறு. ஒரு வாரத்திற்கு அனைவரும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களை இடிக்கவேண்டும் என்று கூறினார். இதனால் முனிசாமி எம்.பி மற்றும், ரூபாகலா சசிதருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story