மாற்று கட்சியினர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர்


மாற்று கட்சியினர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர்
x

ஆனேக்கல்லில் மாற்று கட்சியினர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர்.

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் டவுனுக்கு நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் சின்னப்பா சிக்கஹாகடே வந்தார். அவர் எதிர்வரும் சட்டசபை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் மாற்று கட்சியினர் அவர்களது கட்சிகளில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சியில் சின்னப்பா சிக்கஹாகடே இணைத்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா மற்றும் காங்கிரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு மக்கள் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்க வேண்டும். அரசு விதித்துள்ள விதிமுறைகளால் மக்கள் சிக்கலில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். கியாஸ் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை இப்படி அனைத்து விலைகளும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. இதில் இருந்து மக்கள் விடுபட எதிர்வரும் சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story