மது குடித்துவிட்டு தாம்பத்தியத்திற்கு மறுத்ததால் கொன்றது அம்பலம்


மது குடித்துவிட்டு தாம்பத்தியத்திற்கு மறுத்ததால் கொன்றது அம்பலம்
x

தொழில் அதிபர் கொலையில் வழக்கில், மது குடித்துவிட்டு தாம்பத்தியத்திற்கு மறுத்ததால் அவரை மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:

கழுத்தை நெரித்து கொலை

நேபாளத்தை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 54). தொழில் அதிபரான இவர் பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வதேரஹள்ளி பகுதியில் தனது மனைவி பேபி தாம்பாக்குடன் (46) வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி ராகேசை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து இருந்தனர். இதுகுறித்து வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராகேசை கொலை செய்ததாக அவரது மனைவி பேபி, பேபியின் கள்ளக்காதலன் பாபு அலி (28) ஆகியோரை வித்யாரண்யபுரா போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ராகேசை 2 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதன்பின்னர் அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

தாம்பத்தியத்திற்கு மறுப்பு

அதாவது தொழில் அதிபரான ராகேசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து உள்ளது. இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பேபியுடன் தகராறு செய்து உள்ளார். மேலும் பேபி தாம்பத்தியத்திற்கு அழைத்த போது எல்லாம் ராகேஷ் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ராகேஷ் மீது பேபிக்கு வெறுப்பு இருந்து உள்ளது. அப்போது தான் பாபு அலியின் பழக்கம் பேபிக்கு கிடைத்து உள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 பேரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர்.இதுபற்றி அறிந்ததும் ராகேஷ் கள்ளக்காதலை கைவிடும்படி பேபியை அடித்து, உதைத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பேபி, பாபு அலியிடம் 'என்னுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் எனது கணவரை கொலை செய்ய வேண்டும். நீ ஆண் மகனாக இருந்தால் எனது கணவரை கொலை செய்' என்று பாபுவை, பேபி உசுப்பேற்றி விட்டதாக தெரிகிறது. இதனால் ராகேசை கொலை செய்ய பாபுவும் முடிவு செய்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி குடிபோதையில் இருந்த ராகேசை 2 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றதும் அம்பலமாகி உள்ளது.


Next Story